தி.மு.க.வின் பகுத்தறிவு காற்றில் பறந்த தருணம் - முன்னாள் அமைச்சர்கள் ஆதீனத்திடம் ஆசீர்வாதம்!
By : Shiva
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானத்திடம் ஆசி பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையான பகுத்தறிவு மற்றும் கடவுள் மறுப்பு என்பது என்ன ஆனது என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்து கடவுள்களையும் இந்து சமய சடங்குகளையும் அவதூறாக பேசி வருவதை தங்கள் ஒரே குறிக்கோளாக கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளை பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகத்தில் இருக்கும் இந்துக்கள் அனைவரது மனமும் புண்படும்படி பேசி வருகின்றனர்.
ஆனால் தி.மு.க. தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அண்மையில் கூட கொரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை செய்யப்பட்ட போதிலும் தி.மு.க. தலைவரின் மகள் சிறப்பு அனுமதி பெற்று கிரிவலம் சென்று வந்தது நாம் அறிந்த ஒன்றே. அதேபோல் தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் வேல் ஏந்தி தன்னை ஒரு இந்துக்களுக்கு ஆதரவானவர் என்பது போல் காட்டிக் கொண்டதையும் நாம் அறிவோம்.
இந்நிலையில் தற்போது திமுக முன்னாள் அமைச்சர்கள்
K.N.நேரு மற்றும் M.R.K.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தருமை ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானத்திடம் ஆசி பெற்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் அதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆதீனத்திடம் சென்று ஆசி பெற்று இருப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.