Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டாலினை வாழ்த்திய மத போதகர்- தந்தையின் பெயரை சாலைக்கு சூட்டியதற்கு நன்றி!

ஸ்டாலினை வாழ்த்திய மத போதகர்- தந்தையின் பெயரை சாலைக்கு சூட்டியதற்கு நன்றி!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  5 May 2021 3:48 AM GMT

2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவுக்கும் முதல்வராகப் பதவி ஏற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதில் திமுக வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமான ஒரு மதத் தலைவரும் அடக்கம்.

சில நாட்களுக்கு முன்பு வரி ஏய்ப்பு செய்ததாக வீடு, ஏசு அழைக்கிறார் அலுவலகம், காருண்யா பல்கலைக்கழகம் என்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரிச் சோதனைக்கு உள்ளான மத போதகர் பால் தினகரன் தான் அவர். 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களின் போது பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக தனது மதக் கூட்டங்களில் பிரச்சாரம் செய்த இவர், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார் என்று 'தீர்க்கதரிசனம்' எல்லாம் கூறினார்.

இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக அவருக்கு சொந்தமான இயங்கி வருமான வரித்துறை ஆய்வு செய்து ₹1000 கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றியதாக செய்தி வெளியான போது இது மோடி செய்யும் சதி என்றெல்லாம் அவரது அனுதாபிகள் பேசினர். அரசியல் சார்பு இல்லாதவர்களாக இத்தகைய மத போதகர்கள் தங்களைக் காட்டிக் கொண்டாலும் உண்மையில் புல் தினகரன் திமுக அனுதாபி என்பதை நிரூபிக்கும் விதமாக வெற்றி பெற்ற ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட செய்தி அமைந்துள்ளது.















அதில் தனது தந்தை, இயேசு அழைக்கிறார் மற்றும் காருண்யா சாம்ராஜ்யத்தை நிறுவிய டி.ஜி.எஸ்.தினகரனின் பெயரை சென்னை மேயராக இருந்த போது ஒரு சாலைக்கு சூட்டியதை நினைவு கூர்ந்து வாழ்த்து தெரிவித்திருப்பது திமுகவுடன் மிஷனரி அமைப்புக்கள் எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கின்றன என்பதையும் திமுக அவர்களது கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றிக் தருகிறது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவனர் இனிகோ இருதயராஜ், கருணாநிதி எவ்வாறு இந்துக்களின் புனித தலமான பரங்கி மலையை செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்று பெயர் மாற்றம் செய்தார் என்ற உண்மையைப் போட்டுடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News