Kathir News
Begin typing your search above and press return to search.

'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் மூலம் கொரோனா நோயை எதிர்கொள்ளும் இந்தியா-அணுசக்தி துறை அமைச்சர்!

தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் கொரோனா நோயை எதிர்கொள்ளும் இந்தியா-அணுசக்தி துறை அமைச்சர்!
X

ShivaBy : Shiva

  |  9 May 2021 7:07 AM IST

கொரோனா தொடர்பான தொழில் நுட்பங்களையும், சாதனைகளையும் வழங்குவதன் மூலம் கொரோனா எதிரான போராட்டத்தில் பாபா அணு சக்தி மையம் மற்றும் அணுசக்தி துறை ஆகியவை துணை நிற்பதாக மத்திய அணுசக்தி துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.


அணுசக்தித் துறை அதிகாரிளுடன், மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் காணொலிக் காட்சி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது குறவன் அக்காலகட்டத்தில் அணுசக்தி துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

பிபிஇ கவச உடைகளை கோபால்ட் மூலம் சுத்தம் செய்யும் நெறிமுறையை உருவாக்கி அந்த உடைகளை மீண்டும் பயன்படுத்தும் அளவிற்கு திறன் கொண்டதாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டறிந்ததற்காகவும், ஹெபா பில்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என்-99 முககவசங்கள் உருவாக்குவதற்கும் அணுசக்தி துறை பெரும் பங்காற்றியது.இந்த வகை முகக் கவசங்கள் என் 95 முகக் கவசங்களை விட திறன் வாய்ந்தது என்று 3 திறன் பரிசோதனை கூடங்கள் சான்றளித்துள்ளது.

அதேபோல் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான உறுதி பாகங்களை அணுசக்தி துறை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. அதோடு ரெஸ்பிரேட்டர், ரீபர், மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கான சிறிய அளவிலான பிளாஸ்மா தொற்று நீக்கக் கருவி மற்றும் பிளாஸ்மா எரியூட்டும் தொழில்நுட்பம் ஆகியவற்றை அணுசக்தித் துறை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வு கூட்டத்தின் போது டாடா நினைவு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 25 சதவீதப் படுக்கைகள் அதாவது சுமார் 600 படுக்கை வசதிகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜித்தேந்திர சிங்கிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக 5,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வந்துள்ளதாகவும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா தீவிரத்துக்கு மரபணு பாதிப்பைத் தீர்மானிக்க கண்காணிப்பு ஆய்வை டாடா நினைவு மருத்துவமனையுடன் இணைந்து மேற்கொள்வதாகவும், இது உலகில் நடைபெறும் தனித்துவமான ஆய்வு என்றும் இதன் முடிவுகள் விரைவில் உலகளாவிய விஞ்ஞானிகளிடம் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார். மேலும் கொரோனா தீவிரத்தை கணிக்கக் கூடிய விதத்தில் வாய்ப் பகுதியில் தெரியும் அறிகுறிகள் பற்றிய ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கொவிட் பீப் கருவி அறிமுகம் செய்யப்பட்டதை நினைவுபடுத்திய டாக்டர் ஜித்தேந்திர சிங், இந்தக் கருவியை ஐதராபாத் ஐஐடி, ஐதரபாத் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றடன் இணைந்து அணுசக்தித் துறை தயாரித்தது எனக் கூறினார். இது கொவிட் நோயாளிகளின் உடலியல் அளவுருக்களை கண்காணிக்கும் செலவு குறைந்த வயர்லெஸ் கருவி என டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார். இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனங்கள் கூட்டாக செயல்பட்டால், நாடு சந்திக்கும் சவால்களுக்கு குறைந்த செலவில் எப்படித் தீர்வு காண முடியும் என்பதற்கு கொவிட் பீப் சரியான உதாரணம் எனவும் இதுதான் உண்மையான தற்சார்பு இந்தியா என அவர் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News