டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு-அரசு தகவல்!
By : Shiva
டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் என்று அந்தந்த மாநில அரசு தெரிவித்துள்ளது
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவத் தொடங்கிய உடன் அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தி வருகிறது.இந்நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதியன்று டெல்லி மாநிலம் ஊரடங்கு அமல் படுத்தியது. அந்த ஊரடங்கு காலம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் அதன் கால அவகாசம் மேலும் ஒரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த பயன்படுத்தியதாகவும் தற்போது டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற அவசர செய்தி கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் டெல்லியில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டால் அதனை மத்திய அரசு உடனடியாக சரி செய்து தடுப்பூசிகளை விநியோகிக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் ஊரடங்கு காலகட்டத்தை மேலும் ஒரு வாரம் அதாவது மே 17ஆம் தேதி வரை நீட்டிக்க இருப்பதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லியை போலவே உத்தரப் பிரதேச மாநிலத்திலும் கொரோனா ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டித்து மே 17ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் யோகி அதித்யநாத் என தெரிவித்துள்ளார். அதே போல் தமிழகத்திலும் மே 10ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.