ஆப்பிரிக்காவில் திடீரென வெடித்துக் கிளம்பிய எரிமலை : தக்க சமயத்தில் உதவிய இந்திய ராணுவம்.!
By : Bharathi Latha
ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசில் இருக்கும் ஒரு நகரத்தில் எரிமலை வெடித்து உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை தற்போது ஏற்படுத்தி உள்ளது. தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் இயற்கை சீற்றங்கள் ஆன வெள்ளம், புயல், எரிமலை வெடிப்பு போன்ற காலநிலை மாற்றங்களால் பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி தான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ஒரு நகரத்தில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடித்த பொழுது, இந்திய ராணுவம் உடனடியாக களத்தில் இறங்கி அங்கு குடியிருக்கும் அப்பாவி மக்களை மீட்டு பத்திரமாக வேறு இடத்திற்கு அனுப்பி உள்ளார்கள்.
மேலும் அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் மக்களையும் வேறு ஒரு இடத்திற்கு அனுப்பவும் இந்திய ராணுவம் உதவி செய்துள்ளது. கிழக்கு காங்கோவின் கோமா டவுனில் உள்ள நைராகோங்கோ என்ற நகரத்தில் தான் எரிமலை வெடிக்கும் நேற்று முன்தினம் மாலை சுமார் ஆறரை மணி அளவில் திடீரென வெடித்தது. இதனால் பீதியடைந்த குடியிருப்பாளர்கள் தப்பிப்பதற்காக ஊரிலிருந்து வெளியேற முயற்சி செய்தனர். நகரத்தில் பீதி பரவியவுடன், காங்கோவில் உள்ள சாய்னா சமாதான படையின் ஒரு பகுதியாக அங்கு உள்ள ஒரு இந்திய இராணுவக் குழு எரிமலையால் பாதிக்கப்பட்ட கோமா டவுனில் பொதுமக்கள் மற்றும் பிற ஐ. நா. ஊழியர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியைத் தொடங்கியது.
இன்று அதிகாலையில் கோமாவில் சுமார் 12 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்களிடையே தொடர்ந்து பீதி நிலவி வருகிறது. கிவா ஏரியின் கரையில் பெருநகர் பகுதியில் அமைந்திருக்கும் விமான நிலையம் எரிமலையின் லாவா குழம்புகள் சென்றுள்ளதாக மக்கள் கூறுகிறார்கள். மேலும் மக்கள் அந்த பகுதியில் இருப்பதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள் என்றும் தெரிகிறது. இந்திய ராணுவம் தகுந்த நேரத்தில் அவர் சார்ந்த மக்களின் உயிர்களை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.