Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க அரசின் தோல்வியா? முழு ஊரடங்கின் போதும் திருச்சியில் போக்குவரத்து நெரிசல்..!

தி.மு.க அரசின் தோல்வியா? முழு ஊரடங்கின் போதும் திருச்சியில் போக்குவரத்து நெரிசல்..!

ParthasarathyBy : Parthasarathy

  |  24 May 2021 2:51 PM GMT

கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று கூறியிருந்தது. மிகவும் அவசியமாக இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வருமாறு அறிவுறுத்தி உள்ளது , அதையும் மீறி வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என்றும் கூறியிருந்தது.

இவ்வளவு தெளிவாக விளக்கம் அளித்த நிலையில் திருச்சியில் இருக்கும் நீதிமன்ற சாலையில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது. அங்கு இருக்கும் மக்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது என்றும் பாராமல் கொரோனாவின் இரண்டாவது அலையின் பாதிப்பு திருச்சியில் தினமும் ஆயிரத்தை தாண்டி இருக்கிறது என்பதையும் பொருட்படுத்தாமல் முக கவசம் அணியாமல் பலரும் வாகனம் இயக்கி வருகின்றனர்.

இதனை பார்த்து அங்கு இருந்த காவல் துறையினர் முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் விதித்ததோடு மட்டும் அல்லாமல் அனாவசியமாக வெளியில் சுற்றி திரிந்த நபர்களின் வாகனத்தை பறிமுதல் செய்தனர். நாம் அனைவரும் இந்த கொரோனா நோயிலிருந்து மீண்டு வரவேண்டும் என்றால் அரசாங்கம் கூறி இருக்கும் விதிமுறைகளை கடை பிடித்து வீட்டில் இருப்பதை தவிர வேறு வழி இல்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News