கொரோனா சூழலில் இந்திய ரயில்வேயின் சேவையை வரலாறு நினைவில் கொள்ளும் - அமைச்சர் பெருமிதம்.!
By : Yendhizhai Krishnan
கொரோனா பெருந்தொற்று போன்ற இக்கட்டான காலத்தில் இந்திய ரயில்வே ஆற்றிய மகத்தான பங்கை வரலாறு நினைவில் கொள்ளும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காலகட்டத்தில் ரயில்வே மண்டலங்களின் செயல்பாடுகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் இன்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். அப்போது இந்த இக்கட்டான காலகட்டத்தில் மருத்துவ உதவிகளை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்றதில் இந்திய ரயில்வேயின் பங்கை வரலாறு நினைவில் கொள்ளும் என்று தெரிவித்தார்.
மேலும் கடந்த 14 மாதங்களாக இந்திய ரயில்வேயின் வலிமையையும், தேவைகளை பூர்த்தி செய்யும் திறனையும் ரயில்வே வெளிப்படுத்தியதாக அவர் கூறினார். இதுவரை இல்லாத அளவில் வழங்கப்பட்டுள்ள முதலீட்டு செலவின ஒதுக்கீடுகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் கொரோனா காலகட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாறு இக்கட்டான சூழ்நிலையில் பணியாற்றும் போது இந்த தேசத்திற்காக இன்னுயிரை இழந்த ரயில்வே பணியாளர்களுக்கு இந்த நாடு நன்றிக்கடன் பட்டிருப்பதாக கூறிய ரயில்வே அமைச்சர் இந்த இக்கட்டான சூழலில் பணியில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்தியாவில் இரண்டாவது அலகின் போது ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மிகவும் சிறப்பான முறையில் நாட்டுக்கு சேவையாற்றி வருவதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இந்த சேவை கொரோனாவிற்கு எதிராக நடைபெற்ற போரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்று தெரிவித்தார். தரமான மற்றும் விரைவான சேவை அனைவராலும் பாராட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதேபோல் முன் களப்பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றினர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தி சரக்கு போக்குவரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை இந்திய ரயில்வே எட்டுவதற்கு உறுதி செய்ததற்கு அதிகாரிகளை அவர் பாராட்டினார்.
Source: PIB