நாகர்கோவிலில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி.!
By : Shiva
நாகர்கோவிலில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட சேதங்களை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி பார்வையிட்டார்.
கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. திடீரென்று பெய்த கன மழையினால் பல இடங்களில் சுவர் இடிந்து விழுந்தும், மரங்கள் விழுந்தும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி சேதமடைந்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். கோட்டூர், வடிவேஸ்வரம் போன்ற பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்ட அவர் அங்கு பாதிப்புக்கு உள்ளான மக்களிடம் உரையாடினார்.
அப்போது மழையால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது என்று பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து வடலிவிளை, வைத்தியநாதபுரம் பகுதியில் மழையினால் சேதமடைந்த வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்தார். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற நாளிலிருந்து பம்பரமாக சுழன்று வேலை செய்து வரும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.