Kathir News
Begin typing your search above and press return to search.

இதை அதிகமாக இரவில் சாப்பிடுவது ஆபத்துதான் : எச்சரிக்கும் ஆயுர்வேதம்.!

இதை அதிகமாக இரவில் சாப்பிடுவது ஆபத்துதான் : எச்சரிக்கும் ஆயுர்வேதம்.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 May 2021 4:41 PM GMT

நம்மில் பெரும்பாலோர் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அப்படி சாப்பிடுவது நல்லதா? என்று கேட்டால், ஒன்று அல்லது இரண்டு பழங்களை சாப்பிடும் வரை நல்லது தான். அதற்கும் மேல் சாப்பிட்டால் நல்லதல்ல என்கிறது ஆயுர்வேதம். வாழைப்பழம் உடலுக்குத் தேவையை அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை எல்லாம் வழங்குகிறது. வாழைப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகை பிரச்சினை இருப்பவர்கள் இதை கண்டிப்பாக சாப்பிடலாம். உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிடலாம்.


ஆனால், இரவு நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிடும் போது சளி பிடிக்கும் ஆபத்து உள்ளதாக ஆயுர்வேதம் சொல்கிறது. எனவே இரவு நேரங்களில் வாழைப்பழம் அதிகம் சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது. அதே போல வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்தும் அதிகம் இருப்பதால் நரம்புமண்டலத்தில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கவும் இது உதவுகிறது. அதே போல இந்த பழத்தைச் சாப்பிடுவதால் மனநிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நம்முடைய மனநிலையில் நல்ல வித்தியாசங்கள் ஏற்படும்.


சாதாரணமாக ஒரு வாழைப்பழத்தில் 105 கலோரிகள் இருக்கும். உடல் எடை குறைப்பவர்கள் 500 கலோரிகளுக்கும் குறைவாக சாப்பிட விரும்பினால் வாழைப்பழத்தோடு ஒரு கப் பால் மட்டும் குடிக்கலாம். அதே போல இரவு நேரத்தில் காரமான உணவைச் சாப்பிட்டுவிட்டு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் போன்ற சிக்கல் எல்லாம் ஏற்படாமல் இருக்கும். சுவாசம் சம்பந்தமான பிரச்சினை இருப்பவர்கள் இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News