கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கான சான்றிதழ் - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
By : Shiva
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய நாள் அன்றே தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கூட தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதை காண முடிகிறது. மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக மக்கள் ஆர்வமுடன் தடுப்பு ஊசி செலுத்தி கொள்கின்றனர். தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் உற்பத்தியையும் மத்திய அரசு அதிகரித்து வருகிறது.
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு செலுத்திய அதே நாளிலேயே அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 'கோவின்' செயலியின் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்படுவது முறைப்படுத்த பட்டுள்ளதாகவும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான நாள் அல்லது நேரத்தை மாற்றியமைக்க கோவின் செயலியில் தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஜூன் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசிடம் இருந்து ஜூன் 6ஆம் தேதி தடுப்பூசி கிடைத்தவுடன் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு 42.5 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.