Kathir News
Begin typing your search above and press return to search.

பொறுப்பான பதவியில் இருந்துக்கொண்டு மதப்பிரச்சாரம் செய்ய கூடாது - இந்திய மருத்துவ சங்க தலைவருக்கு நீதிமன்றம் சாட்டையடி!

பொறுப்பான பதவியில் இருந்துக்கொண்டு மதப்பிரச்சாரம் செய்ய கூடாது - இந்திய மருத்துவ சங்க தலைவருக்கு நீதிமன்றம் சாட்டையடி!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  5 Jun 2021 9:55 AM GMT

ஆயுர்வேத மருந்தை விட அலோபதி மருந்து தான் நோயை குணப்படுத்தும் என்று நிரூபிப்பதாக கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு எதிராகவும் கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர்(IMA) ஜெயலாலுக்கு மதப் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்றும் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் பதவியை பயன்படுத்தி பல இடங்களில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த அதன் தலைவர் ஜெயலால், தனது தலைவர் பதவியை முறைகேடாக பயன்படுத்தி இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் இந்து மதம் மற்றும் ஆயுர்வேதத்திற்கு எதிராக பத்திரிகைகள் ஊடகங்களில் எழுதுவதற்கும் பேசுவதற்கும் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் மீது நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் அவர் பேசிய நேர்காணல்கள் மற்றும் அவர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகளிடம் தான் மதப் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்றும் இந்து மதத்திற்கு எதிராக எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றும் ஆயுர்வேத சிகிச்சை முறைக்கு எதிரானவன் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் அலோபதி மற்றும் ஆயுர்வேத மருந்துகளை கலந்து அளிக்கும் சிகிச்சையை மட்டும் எதிர்ப்பதாகவும் அவர் மேலும் அவருக்கு எதிராக ஆர்எஸ்எஸ் உத்தரவின் பேரிலே இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயலால் அளித்துள்ள உத்தரவாதத்தை ஏற்று அவருக்கு எந்த தடையும் விதிக்க தேவையில்லை என்றும் அதே வேளையில் மதம் குறித்த பிரச்சாரம் செய்ய இந்திய மருத்துவர் சங்கத்தை ஜெயலால் பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்திய அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஜெயலால் ஈடுபடக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சாதாரண சர்ச்சில் உள்ள பாதிரியாரும் இந்திய அளவில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் இது போன்றவர்களும் மத பிரச்சாரம் செய்வது தங்கள் மதத்திற்கு செய்யும் சேவை என்று கருதிக்கொண்டு இந்து மதத்தை மட்டும் அவமதித்து இந்து மதத்தில் உள்ளவர்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக இருந்து வருகிறது. எனவே கட்டாய மதமாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு எதிராக சட்டம் ஒன்றை இயற்றி கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக இருந்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News