Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடக அரசின் தீவிர நடவடிக்கை : தடுப்பூசி செலுத்துவதில் பெங்களூரு முன்னிலை..!

கர்நாடக அரசின் தீவிர நடவடிக்கை : தடுப்பூசி செலுத்துவதில் பெங்களூரு முன்னிலை..!
X

ShivaBy : Shiva

  |  5 Jun 2021 8:16 PM IST

கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பை மிகவும் அதிகமாக உணர்ந்த மாநிலங்களில் ஒன்றான கர்நாடகா தற்போது தடுப்பூசிகள் அதிகம் செலுத்தப்பட்ட மாநிலமாக சாதித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கையை மாநிலம் மற்றும் மாவட்ட வாரியாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கர்நாடக மாநிலம் அதிக தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட மாநிலமாக இருப்பது தெரிய வந்துள்ளது. கர்நாடகாவின் பெங்களூரில் மட்டும் மொத்தம் 99 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அவர்களில் 36.3 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 29.4 லட்சம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் 6.9 லட்சம் மக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு உள்ளனர் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவை தொடர்ந்து மும்பையில் 1.3 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்ற இலக்கில் 27.3 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பெங்களூர் மற்றும் மும்பையைத் தொடர்ந்து புனே மற்றும் அஹமதாபாத் ஆகிய நகரங்களில் 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கோவின் செயலி மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கையைத் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதில் மாவட்டம் வாரியாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மொத்தம் 726 மாவட்டங்களில் மொத்தம் 13 மாவட்டங்களில் மட்டுமே 10 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தென்னிந்தியாவில் பெங்களூரை அடுத்து சென்னை மட்டுமே இந்த 13 மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. 46 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்ற இலக்கில் சென்னையில் மொத்தம் 15.5 லட்சம் பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கொரோனா தொற்று அதிகமாக இருந்து வந்த நிலையிலும் அதனை சமாளித்து அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

Source: TOI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News