'காங்கிரஸ் கட்சியின் மென்மையான ஹிந்துத்துவம் நாட்டை அழிக்கிறது' : கேரள மாடல் புகழ் ஷைலஜா டீச்சர்..!
By : Shiva
காங்கிரஸ் கட்சி தனது மென்மையான இந்துத்துவா போக்கினால் இந்தியாவை அழித்துவிட்டதாக கேரளா முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
கேரளாவின் முன்னாள் சுகாதார அமைச்சரும் கேரளாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பை திறமையாக கட்டுப்படுத்தியதாக
உலகளவில் பிரபலமடைந்த ஷைலஜா காங்கிரஸ் கட்சியையும் அதன் மென்மையான இந்துத்துவா போக்கும் நாட்டை சீரழித்து விட்டதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சியின் இந்திராகாந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் காலங்களில் இவ்வாறு நடைபெற்றது என்று கூறிய அவர் தற்போது ராகுல் காந்தியும் இந்தியாவை அழித்துக் கொண்டிருக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தி அனைத்து கோவில்களுக்கும் செல்வதாகவும் முக்கியமாக அவர் சிவாலயங்களுக்கு செல்வதாகவும் அவர் தெரிவித்தார். மதசார்பற்ற நாட்டில் இருந்து கொண்டு கட்சி தலைவர் ஒருவர் இது போன்று கோவிலுக்கு செல்லக்கூடாது என்று ஷைலஜா தெரிவித்தார். இது போன்று கோயில்களுக்குச் சென்று வழிபட்டு காங்கிரஸ் கட்சி வித்தைகள் காட்டி வருவதாக விமர்சித்த அவர், மாநில காங்கிரஸ் தலைமை இது போன்ற 'வித்தைகளை' செய்யாது என்றும் ஒரு 'மதச்சார்பற்ற' கேரளாவை உறுதி செய்யும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
ஷைலாஜா இவ்வாறு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரிப்புனிதுரா எம்.எல்.ஏ கே.பாபு என்பவர் கோயில்களுக்கு செல்வது தவறா என்று கேள்வி எழுப்பினார். இதனால் கேர்ள் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் சமயங்களில் இந்து வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவ்வாறு அவர் கோவில்களுக்கு செல்வதால் சிறுபான்மையினரின் வாக்கு கிடைக்காமல் போகும் என்று ஒரு கருத்து கணிப்பு தெரிவித்துள்ளதாக பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார். எவ்வாறாயினும் ஒரு மதசார்பற்ற நாட்டில் அரசியல்வாதிகள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இவ்வாறு கூறியுள்ளது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Source: Opindia