சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் பெண் போலீசை தரைகுறைவாக பேசி, தி.மு.க அமைச்சர் பெயரை சொல்லி அராஜகம்!
By : Parthasarathy
சென்னை மண்ணடியில் போலி இ-பதிவுடன் வந்த ஆட்டோ ஓட்டுனரின் வாகனத்தை அங்கு இருந்த பெண் போலீசார் பறிமுதல் செய்தினர். அப்பொழுது அந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த போலீசாரை தரைகுறைவாகவும், ஒருமையில் பேசியதோடு, அமைச்சர் சேகர் பாபுவின் பெயரை பயன்படுத்தி மிரட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தற்போது ஊரடங்கு கடுமையாக அமலிலுள்ள நிலையில், சென்னை பாரிமுனையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த அக்சர் அலி என்பவரை விசாரித்தனர். விசாரணையில் அவர் மாற்றுத்திறனாளி, மருத்துவ காரணங்களுக்காக வெளியில் செல்வதாக போலி இ-பதிவு பெற்றுக்கொண்டு ஆட்டோவில் சவாரி ஏற்றி சுற்றி வந்தது கண்டுபிடக்க பட்டது. இதனால் அங்கு இருந்த காவல் உதவி ஆய்வாளர் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
இதனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் அக்சர் அலி அந்த பெண் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரை மிகவும் தரைகுறைவாக பேசினார். அதற்கு அந்த போலீசார் தான் அவருடைய கடமையை செய்வதாக கூறியவுடன், அங்கிருந்த அக்சர் அலி "ஒரு பொண்ணு நீயே இப்படி பேசுறியா என்று ஒருமையில் பேசிவிட்டு, நீ நாசமா போய்டுவ" என்று சாபம் இடும் வகையில் பேசினார். இதனை தொடர்ந்து தொலைபேசியில் அவருக்கு தெரிந்தவருக்கு போன் செய்துவிட்டு, அங்கு இருந்த போலீசாரை பேசுமாறு வற்புறுத்தினர், பின்னர் அமைச்சர் சேகர் பாபுவிடம் பேசுறியா என்று மிரட்டும் தொனியில் அராஜகத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக அந்த பெண் போலீஸ் தன்னிடம் அராஜகமாகவும், ஒருமையில் பேசியதாகவும், ஆட்டோ சாவியை தன்னிடமிருந்து பிடிக்கும் போது கைகளில் காயம் ஏற்படுத்தியதாகவும் கூறி அக்சர் அலி மீது புகார் அளித்துள்ளார். ஊரடங்கு சமயத்தில் மக்கள் போலி இ-பதிவு பெற்றுக்கொண்டு, கடமை செய்த போலீசாரிடம் ஒருமையில் பேசுவது, தி.மு.க அமைச்சர் பெயரை சொல்லி மிரட்டுவது போன்ற அராஜக போக்கை ஸ்டாலின் கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.