லடாக் எல்லையில் நிலவும் கடும் குளிரை சமாளிக்க முடியாமல் திணறும் சீன ராணுவ வீரர்கள்.!

By : Bharathi Latha
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து முயன்றுள்ளனர். கடந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்படும் போர் பதற்றத்தை தணிக்க இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இதில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு நாடுகளும் கடந்த ஆண்டு இறுதியில் ஒப்புக் கொண்டன. கடந்த பிப்ரவரியில் சீன படைகள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டன. இந்திய வீரர்களும் தங்களது நிலைக்கு திரும்பினர். தற்போது கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்திய தரப்பில் 50,000 வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல சீன ராணுவம் தனது எல்லையில் 50,000 வீரர்களை குவித்துள்ளது. லடாக் எல்லையில் நிலவும் உறைய வைக்கும் குளிரால் 90% சீன வீரர்கள் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
லடாக் எல்லையில் பணியமர்த்தப்படும் இந்திய வீரர்கள் 2 ஆண்டுகள் வரை அதே பகுதியில் பணியாற்றுகின்றனர். ஆண்டுதோறும் 40 முதல் 50% வீரர்கள் மட்டும் சுழற்சி முறையில் மாற்றப்படுகின்றனர். லடாக் எல்லையில் தற்போது நிலவும் உறைய வைக்கும் குளிரை சீன வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. இதன்காரணமாக 90 சதவீத சீன வீரர்கள் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதாவது ஒரு நாளுக்குத் 90% வீரர்கள் புரிய வைக்கும் பணியில் சமாளிக்க முடியாமல் உடல்நலக் குறைவால் பாதிக்கப் படுகிறார்கள். மலைப் பகுதியில் பணியாற்றுவது சீன வீரர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. அவர்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதால் சீன வீரர்கள் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளன.
