கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
By : Shiva
கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கல்யாணராமன் பல இடங்களில் திராவிட இயக்கச் சித்தாந்தத்தை விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் பதிவுகள் அனைத்தும் இஸ்லாமியர்களை குறிவைத்து இருப்பதாக கூறி இவர் மீது இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாநில செயலாளர் சாஹிர்கான் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
இதன் காரணமாக கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்களாக அவருக்கு பெயில் கிடைக்காத நிலையில், அவரது மனைவி சாந்தி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததை அடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவர் மீது தொடரப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
தமிழகத்தில் தி.மு.க-வினர் மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் இந்து சமூகத்தை கொச்சையாகவும், பிராமணர்களை குறிவைத்தும் அனைத்து மேடைகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பேசி வருகின்றனர். தங்கள் சித்தாந்தத்தை உயர்த்திப் பேச வேண்டும் என்பதற்காக இந்து மதத்தையும் இந்து கடவுள்களையும் பற்றி தொடர்ந்து அவதூறு செய்து வருபவர்கள் மீதும் இதுபோல வழக்கு தொடர்ந்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.