Kathir News
Begin typing your search above and press return to search.

பிரசித்திபெற்ற காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோயிலில் தீ விபத்து!

பிரசித்திபெற்ற காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோயிலில் தீ விபத்து!

ParthasarathyBy : Parthasarathy

  |  9 Jun 2021 10:25 AM GMT

காஷ்மீரில் ரீஸாய் மாவட்டத்தில் கத்ரா நகரில் பிரசித்திபெற்ற வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. இன்று இந்த கோயிலில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு இருக்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கோயிலுக்குள் இருக்கும் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொட்டகையில் திடீரென்று தீ பற்றிக்கொண்டது. இதனால் கொட்டகை முழுவதும் தீக்கிரையானது. இது குறித்து தகவல் அறிந்துவந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் தேவஸ்தான தலைமை நிர்வாகி அறிவித்தார். கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News