சென்னையில் நோய்தொற்று தொடர்ந்து குறைவு - குரோம்பேட்டை கொரோனா சிகிச்சை மையம் மூடல்!
By : Shiva
ழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆங்காங்கே தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால் தனியார் பங்களிப்புடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 28 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதால் அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக சிகிச்சை மையம் மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து குரோம்பேட்டை மருத்துவமனை நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில் " கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ஆக்சிஜனுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது நோய்தொற்று எண்ணிக்கை குறைந்து விட்டதால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்த சிகிச்சை மையம் மூடப்பட்டு உள்ளது" என்று அவர் தெரிவித்தார். "மேலும் வருங்காலத்தில் தொற்று அதிகரித்தால் சிகிச்சை மையம் திறக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாடு முழுவதும் குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது குருநாத் நோய் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கிவிட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.