கர்நாடகாவில் குடும்பம் நடத்தி வந்த பாகிஸ்தான் பெண் கைது - துருவி துருவி விசாரணை!
By : Shiva
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் இருந்து கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த காதிஜா மெஹ்ரின் என்ற பெண் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள பத்கல் என்னும் ஊரில் நவோயதா காலனியில் வசித்து வந்துள்ளார். அவர் சில முகவர்களின் உதவியோடு இந்தியாவில் நுழைந்துள்ளார் என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
2014ஆம் ஆண்டு அவருக்கும் பத்கலை பூர்வீகமாக கொண்ட அவரது கணவருக்கும் துபாயில் திருமணம் முடிந்துள்ளது. பிறகு இந்தியாவிற்கு மூன்று மாத காலங்கள் சுற்றுலா விசா மூலம் வந்த அவர் தன் கணவருடன் இங்கேயே சட்டவிரோதமாக தங்கி உள்ளார். அவர் இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் தான் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். பின்னர் அவர் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைப் போலி ஆவணங்கள் மூலம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து கர்நாடக காவல்துறைக்கு தகவல் கிடைத்தவுடன் காதிஜா மெஹ்ரின் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பிறகு நீதிமன்றம் அவரை ஜூன் 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. அவர் மீது வெளிநாட்டினர் சட்டம், 1946ஐ மீறியதற்காக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து கொண்டுள்ளார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரகாஷ் தேவராஜு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி மூன்று வருடங்கள் வசித்து வந்தவரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.