கோவில் நிலத்தை ஆக்கிரமித்து தட்டிக்கேட்டவரைத் தாக்கிய உடன்பிறப்பு - தொடரும் விடியல்.!
By : Shiva
செங்கல்பட்டு அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை தட்டிக்கேட்ட கோவில் நிர்வாகியை தி.மு.க நிர்வாகிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே ஆன நிலையில் திமுகவின் அராஜகம் தொடங்கி விட்டதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் கிராமத்தில் அம்பேத்கர் நகரில் அங்காளம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்த அங்காளம்மன் கோவிலுக்கு அருகே வசித்து வரும் அதிமுக பிரமுகரான சுந்தர் என்பவர் கோவில் நிலத்தில் தடுப்பு சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது குறித்து சுந்தரிடம் கோவில் நிர்வாகியான கண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகி சுந்தர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோவில் நிர்வாகியான கண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். திமுக நிர்வாகிகள் தாக்கியதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து திமுக நிர்வாகியான சுந்தரை கைது செய்தனர். சுந்தர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு, கட்ட பஞ்சாயத்து, காவலர்கள் மீது தாக்குதல் என பல்வேறு புகார்கள் திமுக நிர்வாகிகள் மீது எழுந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Source : News J