துரைமுருகன் வெற்றி செல்லுமா? - நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்பம்!

By : Mohan Raj
வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக துரைமுருகன் வெற்றி பெற்றதற்கு எதிராக அதிமுக வேட்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 10வது முறையாக காட்பாடியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் வி. ராமு போட்டியிட்டார். இதில், துரைமுருகனுக்கும் , அதிமுக வேட்பாளர் வி. ராமுவுக்கும் கடும் போட்டி நிலவியது. ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்து வந்த துரைமுருகன், இறுதியில் 745 என்ற சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதை எதிர்த்து தோல்வியடைந்த ராமு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, "வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாகவும், தபால் மற்றும் மின்னணு வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
