உருமாறும் கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பயணிகளுக்கு தடை : பிலிப்பைன்ஸ் முடிவு.!

By : Bharathi Latha
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பாதிப்பு தற்சமயம் குறைந்து வந்தாலும் மீண்டும் உருமாறும் புதிய வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளனர். தங்களது நாட்டில் தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தன. தடுப்பூசிகள் அதிகமான அளவில் மக்களுக்கு செலுத்தப்படும் தந்தாலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினசரி அளவாக தினம் இருந்து வருகிறது. எனவே வெளிநாட்டினர்களை தங்களுடைய நாட்டில் அனுமதிப்பதன் மூலமும் மற்றும் மிகவும் வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகளுக்கு ஜூன் 30ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு தற்சமயம் அறிவித்து உள்ளது. இதுகுறித்த தற்பொழுது பிலிப்பைன்ஸ் அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் மேற்கண்ட ஏழு நாடுகளை பயணம் மேற்கொண்ட எந்த ஒரு பயணிகளும் வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பிறகுதான் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் குறிப்பாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் நுழைய அவர்களுக்கும் தடை தொடரும் என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் சார்பில் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
