பாரிஸில் நடைபெறும் விவாடெக்கின் டிஜிட்டல் நிகழ்ச்சி : பங்கேற்கும் முக்கிய தலைவர்கள்.!

By : Bharathi Latha
விவாடெக் என்பது ஒரு டிஜிட்டல் சார்ந்த நிகழ்ச்சியாகும். விவாடெக் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தலைநகரில் நடைபெறும். ஐரோப்பாவில் மிகவும் பிரம்மாண்டமான டிஜிட்டல் மற்றும் பொதுமை நிறுவனங்களை ஆதரிக்கும் ஒரு நிகழ்ச்சி. பாரிசில் இன்று நடைபெறும் விவாடெக் டிஜிட்டல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இந்த விவாடெக்கின் 5வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். இதனுடைய நான்காவது நிகழ்ச்சியின்போது 'நல்ல தொழில்நுட்பம்' என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட நடைபெற்றது. அதில் சுமார் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் அவர்கள் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அளவில் காணொலி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பல உலக தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர். அதில் குறிப்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் திரு பெட்ரோ சான்சே, பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அங்கம் வகிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான டிம் குக், பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான(CEO) மார்க் ஜுகர்பெர்க், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபர் பிராட் ஸ்மித் போன்ற பெரு நிறுவனங்களின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
