Kathir News
Begin typing your search above and press return to search.

கலிபோர்னியாவின் பெரிய காட்டுத்தீயாக வரலாற்றில் இது பதிவாகக் கூடும்: வல்லுநர்கள் கருத்து.!

கலிபோர்னியாவின் பெரிய காட்டுத்தீயாக வரலாற்றில் இது பதிவாகக் கூடும்: வல்லுநர்கள் கருத்து.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  16 Jun 2021 6:25 PM IST

பொதுவாக மரங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் இயற்கையான முறையில் காட்டுத்தீ என்பது ஏற்படுவது வழக்கம். காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவராமல் விட்டால் அது பல உயிர்களையும் குறிப்பாக வனவிலங்குகள் மற்றும் அதன் புகலிடங்கள் மேலும் அங்குள்ள அத்தனை மரங்களையும் சாம்பலாகிவிடும். இதே மாதிரி சென்ற ஆண்டு அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீ மிகவும் மோசமானது. அதேபோல இந்த வருடம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீ ஒரு வாரத்துக்கு மேல் நீடித்தது. இதில் சுமார் 10 லட்சம் ஏக்கர்கள் அல்லது 4,096 சதுர கி.மீ., நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலையும் ஏற்பட்டது. 13,700 தீயணைப்பு வீரர்களும், தேசிய காவல்படை மற்றும் அமெரிக்க ராணுவமும் காட்டுத்தீயை பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கலிபோர்னியாவின் தென் பகுதியில் உள்ள வென்ச்சுரா வட்டாரத்தில் தீயணைப்புப் பணிகளில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது.


தென்கிழக்கு கலிபோர்னியா, சான்டா பார்பரா வட்டாரக் கரையோரப் பகுதி ஆகியவற்றிலும் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. அந்த பகுதிகளுக்கு சிகப்புக் கொடு எச்சரிக்கையான, அதி தீவிர காட்டுத்தீ எச்சரிக்கையை, அமெரிக்க தேசிய வானிலை சேவை மையம் விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், கடந்த ஆண்டைப் போல் மிகப் பெரிய காட்டுத்தீயாக வரலாற்றில் இது பதிவாகக் கூடும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News