Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்களை வழங்கி வரும் தமிழக பா.ஜ.க!

கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்களை வழங்கி வரும் தமிழக பா.ஜ.க!

ParthasarathyBy : Parthasarathy

  |  16 Jun 2021 3:06 PM GMT

தமிழக பா.ஜ.க சார்பாக கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் மாநிலம் முழுவதும் இருக்கும் பல மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டது. அதே சமயத்தில் பா.ஜ.க வை சேர்ந்த அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களால் முடிந்த உதவிகளை மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று கோவை தொகுதி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் ESI மருத்துவமனைக்கு மருத்துவ உதவிகள் வழங்கினார்.


இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "கோவை ESI மருத்துவமனைக்கு தள்ளு படுக்கைகள், முககவசம், பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டது. உடன் சிங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெயராமன் & சிங்கை தொகுதி நிர்வாகிகள்." என்று வானதி ஸ்ரீனிவாசன் ட்வீட் செய்துள்ளார்.


அதே போல் தமிழக பா.ஜ.க சார்பாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை கோவையில் உள்ள மருத்துவமனைக்கு வழங்கினார். இது குறித்து அவர் ட்வீட் செய்த போது "கோவையில் விவேகானந்தா சேவா கேந்திரத்திற்கு தமிழக பா.ஜ.க சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள், தள்ளுவண்டிகள், இன்று வழங்கப்பட்டது." என்று வானதி ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டு இருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News