யூ ட்யூப் மதன் தலைமறவான நிலையில் அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை!

By : Mohan Raj
யூ டியூபர் 'பப்ஜி' மதன் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.
யூ ட்யூபில் ஆபாசமாக பேசி வந்த மதன் 18 பிளஸ் ஆகிய யூடியூப் சேனல்களில் விளையாட்டின் டிப்ஸ் போன்றவை சொல்லிக் கொடுப்பதாக கூறி சிறுவர், சிறுமிகளிடம் மிகவும் ஆபாசமாக பேசி வந்த மதன் என்ற நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்ததை தொடர்ந்து அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.
புளியந்தோப்பில் உள்ள சைபர் க்ரைம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு ஆஜராகும் படி காவல்துறை உத்தரவிட்ட நிலையில், மதன் தலைமறைவானார். எனவே தலைமறைவாக உள்ள மதனை தேட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். சேலத்தில் மதன் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து அங்கு சென்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து சேலத்தில் இருந்து மதனின் மனைவி கிருத்திகா மற்றும் அவரது தந்தையை சென்னை அழைத்து வந்த போலீசார் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
