Kathir News
Begin typing your search above and press return to search.

இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் மூலிகைகள்.!

இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் மூலிகைகள்.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Jun 2021 12:46 AM GMT

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெளியிருந்து தான் உணவுகள் நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் பெறப்படுகிறது. அதற்கு சில முக்கியமான மூலிகைகளை நீங்கள் உட்கொள்வதால் நோய் தொற்றுக்கு எதிராக உங்களால் போராட முடியும் குறிப்பாக இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய மூலிகைகளும் நமக்கு மிகுந்த பலன்களைத் தரக்கூடியது. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். பழங்காலத்தில் இருந்தே, வேம்பு மருத்துவ குணம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஒரு மூலிகையாகவும் உள்ளது. இது வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.


துளசி என்பது ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் அத்தியாவசிய மூலிகைகளில் ஒன்றாகும். காலையில் ஒரு சில துளசி இலைகளை முதலில் மென்று சாப்பிடுங்கள். பின் துளசி இலைகளை வேகவைத்த தேநீரை அருந்துங்கள். இதனால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும். துளசி ஒரு சக்திவாய்ந்த கிருமி நாசினியாகும். இதில் பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால், கிருமிகள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உங்கள் உடலில் நுழைந்த பிறகு அவற்றைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்க இது உதவும்.


அஸ்வகந்தா ஒரு அடாப்டோஜென் என்று சொல்வார்கள் அதாவது இது மன அழுத்தத்தை குறைக்கும். மன அழுத்தம் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து, உடலை வைரஸ் தொற்றுநோய்களால் பாதிக்கச் செய்கிறது. இந்த தொற்றுநோய் சமயத்தில் அஸ்வகந்தாவை உட்கொள்வது மிகவும் நல்லது, இது கொரோனா வைரஸ் தொற்றுநோயை பரவும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News