Kathir News
Begin typing your search above and press return to search.

'அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும்' - இந்து முன்னணி வலியுறுத்தல்.!

அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்.!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  18 Jun 2021 1:31 AM GMT

கோவில் சொத்துக்களை மீட்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அறநிலையத் துறை நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசியல்வாதிகளின் பிடியில் உள்ள கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், "கோவில்களில் இருந்தும் வரும் வருமானத்தை பயன்படுத்துவது சொத்துக்களை பாதுகாப்பது குறித்து உயர் நீதிமன்றம் கடந்த வாரம் 75 வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இவற்றை விரைவில் செயல்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

உயர் நீதிமன்றம் கோவில்களின் வருமானத்தை பயன்படுத்தி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல், திருவிழாக்களுக்கு செலவழித்தல், பழைய மற்றும் வருமானம் இல்லாத கோவில்களுக்கு உபரி வருமானத்தை வழங்கி நிதி உதவி செய்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இதை பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் அறிவிப்பதாக அறநிலையத் துறை அமைச்சர் கூறியது வரவேற்ற அவர், அவற்றை ஆக்கிரமித்து அவர்களின் பெயரையும் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குறிப்பாக அரசியல்வாதிகள் பிடியில் உள்ள பல கோவில்களில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் மற்றும் தமிழில் அர்ச்சனை செய்ய வழிவகை செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என்றும் அதேசமயம் அரசு ஆகம விதிகளில் தலையிடக்கூடாது என்றும் இந்து முன்னணி மாநில தலைவர் கூறியுள்ளார். அதேபோன்று "திமுக அரசு உண்மையிலேயே மதச்சார்பற்ற அரசாக இருந்தால் சர்ச்கள், மசூதிகளையும் கையகப்படுத்தி அங்கும் தமிழ் வழியில் வழிபாடு நடத்த உத்தரவிட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News