'பா.ஜ.க-வினரை மிரட்டி பார்க்கலாம் என தி.மு.க-வினர் நினைத்தால் அது நடக்காது' : சரவணகுமார் கைது குறித்து நாராயணன் திருப்பதி தடாலடி!

By : Kathir Webdesk
திண்டுக்கல் வடமதுரை பகுதி பா.ஜ.க சமூக ஊடக பிரிவின் செயலாளர் சரவணகுமார் திமுக அரசை விமர்சித்து முகநூலில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சரவணகுமாரை முகநூலில் அவதூறு பரப்பியதாக கூறி கைது செய்தது காவல் துறை. தொடர்ந்து பா.ஜ.க-வினர் திண்டுக்கல்லில் பா.ஜ.க-வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல போராட்டங்களுக்கு பின்பு சரவணகுமார் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில்,"இன்று காலை திண்டுக்கல் வடமதுரை பகுதி சமூக ஊடக பிரிவின் செயலாளர் சரவணகுமார் அவர்களை முகநூலில் அவதூறு பரப்பியதாக கூறி கைது செய்தது காவல் துறை. தகவலறிந்ததும் நமது கட்சியை சார்ந்த பலர் உடனடியாக காவல் நிலையம் சென்றதோடு மாவட்ட தலைவர் பழனி கனகராஜ் அவர்கள் களத்தில் இறங்கி சரவணகுமாரை விடுவிக்க போராடியதோடு அவர் மீது புகார் அளித்த தி மு க வினரின் பிரதமர் மற்றும் பாஜக நிர்வாகிகள் மீதான ஆபாச, அராஜக பதிவுகளை சுட்டிக்காட்டி தி மு க வினரை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி உயர் அதிகாரிகளிடம் வாதிட்டார்.
மேலும், முன்னின்று கட்சி தொண்டர்களோடு போராட்டம் செய்து கைதானார். நானும் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு பேசினேன். தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுக்காமல், பாஜகவினர் மீது கைது நடவடிக்கை நியாயமானது அல்ல என்று வாதிட்டேன். இந்நிலையில் திரு.சரவணகுமார் மீது வழக்கு பதிவிடப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக அறிந்தேன். வழக்குகளை கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. சட்ட ரீதியாக சந்திப்போம். ஆனால் இது போன்ற வழக்குகளில், கொரோனா தொற்று காலத்தில் கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் பலமுறை அறிவுறுத்தியும், தி.மு.க-வினரின் அராஜகத்தால், அழுத்தத்தால் ரிமாண்ட் செய்யும் நடவடிக்கைகள் தவறானது.
மேலும், பிரதமர் குறித்து தி.மு.க-வினர் செய்த, செய்து கொண்டிருக்கிற அவதூறுகள் எண்ணிலடங்கா. தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் யார் செய்தாலும் குற்றமே.ஆனால், ஒரு வினைக்கு எதிர்வினை என்ற நிலையில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன இதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை விட கட்டுப்பாடே மிக முக்கியம். அனைத்து அரசியல் கட்சியினரும் ஆக்க பூர்வமான விமர்சனங்களை செய்வதோடு, தனிப்பட்ட தரம் தாழ்ந்த பதிவுகளை தவிர்ப்பது சமுதாயத்திற்கு நல்லது.
புகார் கொடுத்த நபர் மே 25ம் தேதியன்றே வடமதுரையை சேர்ந்த பாஜகவினர் கைது செய்யப்படுவார்கள் என்று பதிவிட்டிருந்தார். பா.ஜ.க-வினரை மிரட்டி பார்க்கலாம் என தி.மு.க-வினர் நினைத்தால் அது நடக்காது என்பதை தி.மு.க-பா.ஜ.க-வினரை மிரட்டி பார்க்கலாம் என தி.மு.க-வினர் நினைத்தால் அது நடக்காது என்பதை தி மு க வினர் புரிந்து கொள்ள வேண்டும்வினர் புரிந்து கொள்ள வேண்டும். சரவணகுமாரை விடுவிப்பதில் விரைந்து செயல்பட்ட அம்மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் அம்மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுகள். அனைவரையும் ஒருங்கிணைத்து உரியவர்களிடம் பேசி துணை நின்ற சமூக ஊடக பிரிவின் தலைவர் CTR நிர்மல்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்", என்று கூறினார்.
