உடனடி புத்துணர்ச்சி பெறுவதற்கு பயன்படும் நீராவி சிகிச்சை முறை!

By : Bharathi Latha
சூடான நீரில் இருந்து வெளியேறும் புகை நீராவி என்று அழைக்கப்படுகிறது. சூடான நீரில் எலுமிச்சை கலந்து நீராவி எடுத்துக்கொள்வது முடி, ஆரோக்கியம் மற்றும் சருமத்திற்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. ஆவி பிடிப்பதால் சளி, காய்சல், தலைவலி மட்டும் குணமடைவதில்ல. ஆவி பிடித்தால் சருமம் பொலிவு பெறுவதுடன் இளமையையும் தக்கவைக்கலாம் என்று கூறினால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.
இயற்கையாக எளிய முறையில், நமது சருமத் துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளையும் நோய்க் கிருமிகளையும் வெளியேற்ற நம் முன்னோர்கள் கையாண்ட மிக எளிய வைத்திய முறை தான் ஆவி பிடித்தல் ஆகும். ஆவி பிடிப்பதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. அதோடு, ஆவி பிடிப்பதால், நமது தோலின் மேற்புறம் விரிவடைந்து, உள்புறத்திலுள்ள தேவையற்ற அழுக்குகள் விரைவாக வெளியேறிவிடும். இதனால் நம் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த நோய்க்கிருமிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடும். வீட்டிலேயே வாரத்திற்கு ஒரு முறையாவது ஆவி பிடித்தால் முகப்பொலிவு கூடும். அதோடு முகச்சுருக்கம் மற்றும் முதுமைத் தோற்றத்தையும் தவிர்க்கலாம்.
மேலும் உங்களுக்கு எப்போது எல்லாம் சோர்வாக இருக்கிறதோ? உடனே புத்துணர்ச்சி பெறுவதற்கு நீங்கள் நீராவி சிகிச்சையை பயன்படுத்தலாம். அதிலும் குறிப்பாக வேப்பிலை நீராவி சிகிச்சை மிகவும் பயன் தரும். எனவே தற்போது நோய் தோற்றக் காலத்தில் அனைவரும் வாரம் ஒரு முறை தங்களுடைய வீட்டில் இந்த வேப்பிலை நீராவி சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் புதிய வித்தியாசத்தை பெறலாம்.
