கொரோனா நிவாரண நிதி வழங்கும் தி.மு.க நிர்வாகி - ரேஷன் கடையை பூட்டி அராஜகம்!
By : Shiva
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே திமிரியில் அருகில் தி.மு.க பிரமுகர் ஒருவர் நியாயவிலைக் கடையை மூடிவிட்டு தனது வீட்டில் கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் கொரோனா நிதியை வழங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சிக்கு பொறுப்பிற்கு வந்ததில் இருந்து பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக அரசு நிதியிலிருந்து கொரோனா நிவாரண நிதி வழங்குவதை ஏதோ தங்கள் கட்சி பணத்தில் செலவு செய்வதைப் போல் தி.மு.க-வினர் ஆங்காங்கே போஸ்டர்கள் வைத்தும் நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.
இதேபோல் ஒரு சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி பேரூராட்சி பகுதியில் இருக்கும் ஒரே நியாயவிலைக் கடையில் தமிழக அரசு சார்பாக கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வந்தது. அப்போது திமிரி பேரூராட்சி திமுக அவைத்தலைவராக இருந்து வரும் ராஜு என்பவர் நியாயவிலை கடையை பூட்டிவிட்டு நிவாரண பொருட்களை அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றார். மேலும் அவர் வீட்டில் வைத்து நிவாரணப் பொருட்கள் மற்றும் கொரோனா நிவாரண நிதியை வழங்கி வருகிறார்.
இதேபோல் திமுகவினருக்கு முன்னுரிமை வழங்கி அவர்களுக்கு பணம் மற்றும் பொருட்களை வழங்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கட்சிப் பணத்தை செலவு செய்வது போல் தி.மு.க-வினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Source : News J