Kathir News
Begin typing your search above and press return to search.

மினி பேருந்துகளிலும் இலவச பயணத் திட்டம் - வலுக்கும் பெண்களின் கோரிக்கை!

மினி பேருந்துகளிலும் இலவச பயணத் திட்டம் - வலுக்கும் பெண்களின் கோரிக்கை!
X

ShivaBy : Shiva

  |  22 Jun 2021 2:10 PM IST

சென்னையில் மாநகர பேருந்தில் மட்டும்தான் இலவசமா நகர மினி பேருந்தில் கிடையாதா என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்ய தொடங்கியுள்ளனர். பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது நகர மினி பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் 13 ரூபாய் வரை டிக்கெட் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நகர்ப்புறங்களில் உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்யும் பெண்களால் இலவச பேருந்து வசதி என்ற திட்டத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் பூ மற்றும் பழ விற்பனை வயதான பெண்கள் இதனால் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

மக்கள், குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்காக கடந்த ஆட்சியில் அம்மா மினி பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது. அரசு போக்குவரத்து கழகத்தின் ஒரு பகுதியான அம்மா மினி பேருந்துகளிலும் கட்டணமில்லா பயண திட்டத்தைக் கொண்டு வருவது, ஏற்கனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் அன்றாடங்காய்ச்சி பெண்களுக்கு உதவியாக இருக்கும். எனவே மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட இலவச பயண‌ திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source : News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News