Kathir News
Begin typing your search above and press return to search.

லாகூரில் குண்டு வெடிப்பு - பாகிஸ்தானில் பரபரப்பு!

லாகூரில் குண்டு வெடிப்பு - பாகிஸ்தானில் பரபரப்பு!
X

ShivaBy : Shiva

  |  24 Jun 2021 6:39 AM IST

பாகிஸ்தானில் லாகூர் குடியிருப்பு பகுதியில் என்று ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் இரண்டு பேர் உயிர் இழந்தனர் மற்றும் 17 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு ஜோஹர் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகில் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியில்தான் ஐநாவினால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத்தின் வீடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குண்டு வெடிப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் சிதைந்த கிடப்பதற்கான காட்சிகள் வெளியாகி உள்ளது.மேலும் அந்த பகுதியில் குண்டு வெடிப்பு நடைபெற்ற போது ஏற்பட்ட சத்தம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டனர். ஜோஹர் டவுனில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து அமைச்சர் உஸ்மான் புஸ்தார் ஐ.ஜியிடம் அறிக்கை கோரியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது என்று காவல்துறை துணை ஆணையர் முடசிர் ரியாஸ் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக லாகூரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் லாகூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source : Republic

Next Story
கதிர் தொகுப்பு
Trending News