Kathir News
Begin typing your search above and press return to search.

உருமாறும் அனைத்து கொரோனா வைரஸ்களுக்கு எதிரான ஒரே தடுப்பூசி: அமெரிக்க விஞ்ஞானிகள் பரிசோதனை!

உருமாறும் அனைத்து கொரோனா வைரஸ்களுக்கு எதிரான ஒரே தடுப்பூசி: அமெரிக்க விஞ்ஞானிகள் பரிசோதனை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Jun 2021 6:03 PM IST

தற்போது உலக அளவில் பலநாடுகளில் கொரோனா வைரஸ் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்ட பல்வேறு விதமாக மாறி மக்களை தாக்குகிறது. எனவே அவற்றிற்கு தீர்வு காணும் விதமாக தற்பொழுது, அனைத்து வகையான கொரோனா வைரஸ்களையும் குணப்படுத்தும் வகையிலான தடுப்பூக்கான சோதனை வெற்றி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவிலும் கூட டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா வைரஸ் சில நோயாளிகளுக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த உருமாற்றம் மிக கவலையளிக்க கூடியது என்று அரசு தெரிவித்துள்ளது.


நம்முடைய பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் உருமாறிய வைரஸை எதிர்க்கும் திறன் கொண்டதா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. டெல்டா பிளஸ் கொரோனா வைரசை தடுப்பூசிகளால் எதிர்க்க முடியாது என்று சில தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுவதை நம்மால் கண்கூடாகவே பார்க்க முடிந்தது. இந்த நிலையில், அமெரிக்க விஞ்ஞானிகள் தற்போது ஒரு புதிய, கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியை உருவாக்கி வருகின்றனர். இது கொரோனாவின், அனைத்து வகைகளையும் வேரறுக்கும். அது மட்டுமல்லாமல், இந்த தடுப்பூசி எதிர்காலத்தில் புதிதாக பெருந்தொற்று உலகில் ஏற்படுவதை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஏற்கனவே இது பற்றிய ஆய்வுகளை தொடங்கியிருந்தனர். தற்போது அதுபோன்ற தடுப்பூசியை எலிகளுக்கு செலுத்தி பரிசோதித்துள்ளனர். விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி எலிகள் மீது பரிசோதிக்கப்பட்டது. சோதனைகள் ஆன்டிபாடிகள் எலிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது. இது ஸ்பைக் புரதத்தை எதிர்க்கக்கூடிய ஆன்டிபாடிகளின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறதாம். பரிசோதிக்கப்பட்ட எலிகளுக்கு, SARS மற்றும் கொரோனா வைரஸ்கள் செலுத்தி விஞ்ஞானிகள் இதை உறுதி செய்துள்ளனர். இவை அனைத்தும் சரியாக நடந்தால், அடுத்த ஆண்டு மனிதர்கள் மீது பரிசோதிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News