பூமிக்கு அடியில் இருந்து வளரும் இந்த காய்கறியின் பல்வேறு அற்புத குணங்கள்!

By : Bharathi Latha
பூமிக்கு அடியில் வளரும் வகையை சார்ந்த பீட்ரூட் ஆனது தன்னுள் பல்வேறு அற்புதங்களை அடக்கியது. பீட்ரூட் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் தருகிறது என்பதை பார்க்கலாம். பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும் கண்களுக்கு பார்வை திறனை அதிகரிக்கிறது. பீட்ரூட் சாறு செரிமான கோளாறை நீக்கும். இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். அல்சர் உள்ளவர்கள் பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட குணமாகும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். உடல் சோர்வு, மன அழுத்தத்தை குறைத்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. அதுமட்டுமின்றி, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
சுமார் குறைந்தபட்சம் ஒருவார கால அளவில் பீட்ரூட் சாற்றை எடுத்துக்கொள்ளும்போது, இதய செயலிழப்பு ஏற்படும் அபாயத்தையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் கொண்டுவரலாம். மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், பீட்ரூட் சாறு உட்கொள்வது மாரடைப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக கூற படுகிறது. எலும்பு தசைகளுக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்குவதில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டறியப்பட்டது. எலும்பு தசைகள் போதுமான ஆக்ஸிஜனைப் பெறாதபோது, அவை பலவீனமடைந்து கை அல்லது கால்களை நகர்த்துவதற்கான திராணியை குறைக்கிறது. அன்றாடம் இந்த பீட்ரூட்டை ஜூஸ் அல்லது சாலட் போன்று ஏதோ ஒருவகையில் எடுத்துக்கொள்ளும்போது, இது போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது.
