கோவிலை விட டாஸ்மாக் முக்கியமா? - ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய இந்து முன்னணி!

By : Mohan Raj
கொரோனா காலத்தில் கோயிலைவிட, டாஸ்மாக்தான் புனிதமானது என அரசு நடந்து கொள்வதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆலயங்களை திறக்க தடை ஆனால் மதுபானகடைகளை திறந்து வியாபாரம் செய்வதை அரசு நியாயப்படுத்தும் விதமாக நடந்து கொள்வதை கண்டித்து தமிழகத்தில் பல்வேற பகுதிகளில் ஆலயங்கள் முன்பு சூடம் ஏற்றி வழிபடும் போராட்டம் நடைபெற்றது.
இதில், தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தமிழ்நாட்டின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களையும் பக்தர்கள் வழிபாட்டிற்குத் திறந்து விடக்கோரி இந்து முன்னணி அமைப்பினர் பாலசுப்பிரமணியர் கோயில் முன்பு சூடம் ஏற்றி ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கடந்த 50 நாட்களுக்கு மேலாக மாநிலத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காக அதைத் திறக்க வேண்டும் எனக் கோரி இந்து முன்னணி பெரியகுளம் பாலசுப்பிரமணி கோயில் முன்பாக சூடம் ஏற்றி ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.
