Kathir News
Begin typing your search above and press return to search.

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 Jun 2021 7:30 AM IST

குறைந்தபட்ச விருந்தினர்களுடன் நடந்து முடிந்த இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம்.


இந்திய சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்து சென்ற முக்கியமான இயக்குனர்களில் ஷங்கர் முதன்மையானவர், இவர் தமிழ் சினிமாவிற்கு வந்து 28 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா டாக்டராக உள்ளார். தொழிலதிபரும், கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதரனின் மகனுமான கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனுக்கும், இவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயம் ஆனது, இதனைதொடர்ந்து நேற்று இவர்களின் திருமணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது.


கொரோனோ தொற்று காரணமாக மிகச்சிலரே இந்த திருமணத்தில் பங்கு பெற்றனர். அதில் முக்கிமானவராக தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்குபெற்றார். உடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நடிகரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஆகியோரும் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News