Kathir News
Begin typing your search above and press return to search.

'கைதி' கதை திருட்டு விவகாரம்: "எங்கள களங்கப்படுத்தாதீங்கோ" - தயாரிப்பு நிறுவனம் கதறல்!

கைதி கதை திருட்டு விவகாரம்: எங்கள களங்கப்படுத்தாதீங்கோ - தயாரிப்பு நிறுவனம் கதறல்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  4 July 2021 2:45 PM IST

கதையை திருடிய விவகாரத்தில் 'எங்களை களங்கப்படுத்தாதீர்' என கைதி பட கதை திருட்டு விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது.


நடிகர் கார்த்தி நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் கைதி, இதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்க பட தயாரிப்பு தரப்பு முயற்சித்து வந்தது. இதற்கிடையில் இந்த கதை கேரளத்தை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவரின் கதை எனவும், தயாரிப்பாளர் 10 ஆயிரம் பணத்தை கொடுத்த கதையை திருடிவிட்டதாகவும் கேரள நீதிமன்றம் இப்படத்தை மறுபதிப்பு செய்யவோ, இரண்டாம் பாகம் எடுக்கவோ தடை விதித்துள்ளது.


இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பு தரப்பில் ஓர் அறிக்கை வெளியிடடப்பட்டுள்ளது அதில், "அனைவருக்கும் வணக்கம்! எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஸ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் திரு. கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது சம்மந்தமாக ஊடக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதே சமயம் கைதி சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரனை முடிவு தெரியாமல், இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!" என அறிக்கை வெளியிட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News