Kathir News
Begin typing your search above and press return to search.

மதமாற்றத்தைத் தட்டிக் கேட்டவர் மீது வி.சி.க தாக்குதல் - அரியலூரில் பரபரப்பு!

மதமாற்றத்தைத் தட்டிக் கேட்டவர் மீது வி.சி.க தாக்குதல் - அரியலூரில் பரபரப்பு!
X

ShivaBy : Shiva

  |  5 July 2021 6:16 AM IST

கிறிஸ்தவ மதமாற்றத்தை எதிர்த்து கேள்வி கேட்ட அரியலூர் மாவட்ட ‌இந்து முன்னணி துணைத் தலைவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களது அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி துணைத் தலைவராக இருந்து வருபவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் கிறிஸ்தவ மத மாற்றத்தை எதிர்த்து கேள்வி கேட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் ரமேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஜெயங்கொண்டத்தில் இந்து முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த காவல்துறையினர் தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். இதுகுறித்து இந்து முன்னணி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News