பருப்பு வகைகளில் சில்லறை விலையில் வீழ்ச்சி- உணவு செயலாளர்!
By : Janani
பருப்பு வகைகளின் சில்லறை விலையில் மத்திய அரசாங்கத்தின் தலையீட்டுக்குப் பின்னர் கணிசமாகக் குறைந்து வருவதாகத் திங்களன்று மத்திய உணவு செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்தார்.
சமீபத்தில் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மில்லர்கள் மற்றும் பருப்பு இறக்குமதியாளர்கள் மீது விதிக்கப்படும் பங்கு வரம்பால் விலை குறைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
"மசூர் பருப்பைத் தவிர மற்ற பருப்பு வகைகளில் விலை கடந்த 4-5 வாரங்களில் சில்லறை மற்றும் மொத்த சந்தை விலைகளில் குறைந்து வருகின்றது," என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் பாண்டே தெரிவித்தார்.
பாரம்பரியமாக மசூர் இங்குக் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றது. மசூரின் இறக்குமதியும் தற்போது அதிகரித்து வருகின்றது மற்றும் அதன் விலையிலும் விரைவில் குறைவு ஏற்படும் என்று அரசாங்கம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
பருப்பு விலைகளைக் கண்காணிக்க மத்திய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை எடுத்துரைத்த அவர் இறக்குமதி கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது என்று செயலாளர் தெரிவித்தார்.
சமீபத்தில், மூங் தவிர அனைத்து பருப்பு வகைகளிலும் பதுக்கலைத் தடுப்பதற்காக அரசாங்கம் அக்டோபர் வரை பங்கு வரம்பினை விதிக்கின்றது. மேலும் ரேஷன் கடைகள் வழியாக எண்ணெய் மற்றும் பருப்பினை விநியோகம் செய்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த செயலாளர், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரிசி மற்றும் கோதுமை மட்டுமே நியோகம் செய்கிறது என்று தெரிவித்தார். இருப்பினும் சில மாநிலங்கள் பருப்பு மற்றும் எண்ணெய்யை விநியோகம் செய்கின்றது.
IPGA துணைத் தலைவர் பிமல் கோத்தாரி, தனியாக வெளியிட்ட ஒரு அறிக்கையில், பொதுவாக மொத்த விலையை விடச் சில்லறை விலையின் விலை அதிகமாகவே இருக்கின்றது என்று தெரிவித்திருந்தார். ஜூன் மாதம் IPGA நடத்திய ஒரு ஆய்வில், மொத்த மற்றும் சில்லறையின் விலை இடையில் இருக்கும் இடைவெளி பெரிதாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சராசரியாக இந்தியாவிற்கு ஆண்டுக்கு 35 மில்லியன் டன் பருப்பு வகைகள் தேவைப்படுகின்றன, இந்த ஆண்டு பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்ப்பாக்கப்படுகின்றது.
Source: Economic Times