Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை இடிப்பு - போலீசார் குவிப்பு!

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை இடிப்பு - போலீசார் குவிப்பு!
X

ShivaBy : Shiva

  |  7 July 2021 7:04 AM IST

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவகத்தை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று இடித்து அகற்றி உள்ளதால் 2 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோயம்புத்தூர் காந்தி பார்க், சுக்ரவார்பேட்டை சாலையில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 909 சதுர அடி பரப்பளவில் ஆக்கிரமித்து உணவகம் ஒன்று கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது. கோவில் நிலங்களை அரசு மீட்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் கணக்கெடுக்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இந்தக் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து கோவில் இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவாக உரிமையாளரிடம் தெரிவித்து 30 நாள் கால அவகாசம் கொடுத்தனர். எனினும் அவர்கள் அந்த இடத்தை காலி செய்யாமல் தொடர்ந்து உணவகத்தை நடத்தி வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த உணவகக் கட்டிடத்தை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் காவல்துறை உதவியோடு ஜேசிபி எந்திரத்தின் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.

Source : Hindu Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News