Kathir News
Begin typing your search above and press return to search.

'இந்தியாவின் சாதனை பதிவுகள் நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது' : பியூஷ் கோயல்!

இந்தியாவின் சாதனை பதிவுகள் நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது : பியூஷ் கோயல்!
X

ShivaBy : Shiva

  |  8 July 2021 7:01 AM IST

இந்தோ-பசிபிக் பகுதியில் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக பங்கெடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

''பகிரப்பட்ட வளங்களுக்கான திட்டத்தை உருவாக்குதல்'' என்ற தலைப்பில், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்த இந்தோ-பசிபிக் பகுதி வர்த்தக அமைச்சர்களுடனான சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரியா, கென்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிஜி, இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பாக கலந்து கொண்டு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உரையாற்றினார்.

அப்போது இந்தியாவின் சாதனை பதிவுகள் நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் வரும் ஆண்டுகளில் இந்தியா மிகவும் நம்பத்தகுந்த நாடாக இருக்கும் என்றும் கூறினார். உலக அரங்கின் புதிய பொருளாதார மையமாக இந்தோ-பசிபிக் பகுதி உள்ளது என்று அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டமான 'சாகர்' என்ற தொலைநோக்கு திட்டத்தை தொடங்கியது குறித்து அப்போது குறிப்பிட்டார்.

இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இத்திட்டம், சம அளவிலான அமைதி மற்றும் அனைவருக்கும் செழிப்பை அளிக்கக்கூடிய வகையில் வழிகாட்டும் கொள்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஒரு வெளிப்படையான நம்பிக்கையான, பிறரை சார்ந்த நுகர்வு சங்கிலியை உறுதி செய்வதை நோக்கிய கருத்தை இந்தியா ஆமோதிக்கிறது என்று தெரிவித்த அமைச்சர், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நுகர்வு சங்கிலியின் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்டார். நுகர்வு சங்கிலி மீட்பை உருவாக்குவதில் இது உறுதியான நடவடிக்கை என்றும் இதில் இதர நட்பு நாடுகளையும் இணைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Source : PIB

Next Story
கதிர் தொகுப்பு
Trending News