Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவை விட மிக கொடியது இது : அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு!

கொரோனாவை விட மிக கொடியது இது : அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 July 2021 6:12 PM IST

"கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை" என்ற அவ்வையின் வார்த்தைக்கு இணங்க ஒருவர் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் வறுமையினால் அதாவது பட்டினியால் இருப்பது மிகவும் கொடுமையான ஒரு விஷயம். அந்த வகையில் தற்பொழுது, உலகில் வறுமைக்கு எதிரான அமைப்பாக இருந்து வரும் ஆக்ஸ்ஃபாம் தற்போது உள்ள கொரோனா சூழ்நிலையில் எவ்வளவு பேர் பட்டினியில் இறக்கிறார்கள் என்பது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்விற்கு 'பல்கிப் பெருகி வரும் பட்டினி வைரஸ்' என்ற பெயருடன் நடத்தப்பட்டது.


அப்படி நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. அனைவர் மனதையும் பதைபதைக்க வைக்கும் உண்மையை விஷயமும் வெளிப்பட்டுள்ளது. ஆம், உலக அளவில் பட்டினியில் நிமிடத்துக்கு 11 பேர் தங்கள் உயிரை இழக்கிறார்கள். உணவுப் பஞ்சம் உள்ளிட்ட சூழல் உலக அளவில் கடந்த ஆண்டைவிட 6 மடங்கு இது தற்பொழுது அதிகரித்துள்ளது என்று வறுமைக்கு எதிரான அமைப்பான ஆக்ஸ்ஃபாம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


இதைப் பற்றி அந்த நிறுவனம் கூறுகையில், கொரோனா வைரசை விட மிகவும் கொடுமையான வைரஸ் என்னவென்றால் அது பட்டினி வைரஸ் தானாம். இந்த உணவுப் பஞ்சத்தால் மட்டும் உலக அளவில் நிமிடத்துக்கு 7 பேர் உயிரிழக்கின்றனர். உலகில் கடந்த ஆண்டு பட்டினி, உணவுப்பஞ்சம் போன்ற காரணிகளால் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். ஆனால், தற்போது அது உலக அளவில் 15.5 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் இதிலும் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உலக அளவில் ஒவ்வொரு நாடும் தங்கள் இராணுவத்திற்கு செலவிடும் தொகை சுமார். 38 ஆயிரம் கோடி. ஆனால் உலக அளவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவி வரும் ஐக்கிய நாடுகள் செலவிடும் தொகையில் இது ஆறு மடங்கு அதிகமாகும். உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உயிரை பணயமாக வைத்து நடக்கும் போருக்கு முக்கியத்துவம் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் யோசித்துப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம்தான்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News