Kathir News
Begin typing your search above and press return to search.

மனநல காப்பகத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு - தஞ்சாவூரில் பரபரப்பு!

மனநல காப்பகத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு - தஞ்சாவூரில் பரபரப்பு!
X

ShivaBy : Shiva

  |  13 July 2021 11:45 AM IST

பட்டுக்கோட்டை அருகே மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் சிறுவன் ஒருவனை அடித்து கொலை செய்துவிட்டு காப்பகத்திலேயே புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் பகுதியில் அவிஸோ மனநல குன்றியோர் காப்பகத்தில் 20க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறுவர்-சிறுமியர் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தை முகமது ஷேக் அப்துல்லா என்பவர் நடத்தி வருகிறார். காப்பகத்தில் தங்கியிருந்த 15 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுவனை தாக்கியபோது அவர் இறந்துவிட்டதால் அவரை அங்கேயே புதைத்து வைத்து விட்டதாக காப்பக உரிமையாளரின் மனைவி கலிமா பீவி புகார் தெரிவித்தார்.

மேலும் அந்த ஆசிரமத்தில் இருந்த மொழி தெரியாத பெண் ஒருவரை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கி அவரையும் கொலை செய்துவிட்டதாக கலிமா பீவி தெரிவித்துள்ளார். இந்த புகாரை அடுத்து பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், வட்டாட்சியர் தரணிகா, மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர் நடராஜன், வருவாய்த் துறையினர் முன்னிலையில் இன்று காப்பகத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டினர். இப்போது கலிமா பீவி காட்டிய இடத்தில் தோண்டியபோது அங்கு எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.

இந்த எலும்புக் கூட்டை கைப்பற்றிய காவல்துறை அதிகாரிகள் காப்பக உரிமையாளர் முகமது ஷேக் அப்துல்லா மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற காப்பகங்களில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தகுந்த சட்டங்களை இயற்றி இதுபோன்ற காப்பகங்களை கண்காணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source : Hindu Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News