இந்துக்கள் தொடர்ந்து மதமாற்றம் - நடவடிக்கை எடுக்குமா அரசு?
By : Shiva
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் 60க்கும் மேற்பட்ட இந்துக்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர். அவர்களில் இந்துக்கள் மட்டும் பாகிஸ்தான் மக்கள் தொகையில் 2% அதாவது 4.5 மில்லியன் மக்கள் தொகை உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இந்த சிந்து மாகாணத்தில் அவ்வப்போது இந்துச் சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து மதமாற்றம் செய்யப் படுவது தொடர்கதையாகி வருகிறது.
இதுபோன்ற கட்டாய மதமாற்ற சம்பவம் மேலும் ஒன்று நடைபெற்றுள்ளது. நகராட்சித் தலைவர் அப்துல் ரவூப் நிஜாமணி என்பவர் இந்த மத மாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் "இன்று, எனது மேற்பார்வையில் 60 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர், தயவுசெய்து அவர்களுக்காக ஜெபிக்கவும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் நிஜாமி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ பதிவில் ஒரு இஸ்லாமிய மதகுருவுடன் இந்துக்களின் குழு கலிமாவை ஓதிக் காண்பிப்பதையும் அவர்களின் முழு மதமாற்றத்தை உறுதி செய்வதாக அந்த வீடியோ பதிவு மூலம் தெரிய வருகிறது. மேலும் "ஒரு முஸ்லீம் நபரின் வாழ்க்கையில் ஒரே நோக்கம் அல்லாவை மகிழ்விப்பது ஆகும். இவ்வாறு அல்லாவை மகிழ்விப்பது மூலம் அவர்களின் வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறும்" என்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.