மதம் மாற வற்புறுத்தும் மனைவி மீது வழக்கு தொடர்ந்த கணவர் - சண்டிகரில் அதிர்ச்சி சம்பவம்!
By : Shiva
தன்னையும் தன் மகனையும் முஸ்லிம் மதத்திற்கு மதம் மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக மாமியார் மற்றும் மனைவி மீது சீக்கியர் ஒருவர் வழக்கு தொடர்ந்ததால் சண்டிகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சண்டிகர் மாநிலத்தில் 2008ஆம் ஆண்டு நகைக்கடை ஒன்றில் மேலாளராக பணியாற்றிவந்த சீக்கியர் ஒருவருக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. அப்போது மாற்றுமத பெண் என்பதால் திருமணத்திற்கு அந்த சீக்கியர் மறுத்துள்ளார். ஆனால் மத நம்பிக்கையில் ஒருபோதும் குறுக்கிட மாட்டேன் என்று அந்தப்பெண் உறுதி அளித்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணமான சில நாட்களிலேயே அவரை இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாற வேண்டும் என்று மனைவியும் மாமியாரும் கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு 2012ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்துள்ளார். அவரை ஒரு சீக்கியராக வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால் தன்னையும் தன் மகனையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய வேண்டும் என்று மாமியாரும் மனைவியும் தினமும் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே தன்னையும் தன் மகனையும் கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாற வேண்டும் என்று வற்புறுத்தி வரும் மாமியார் மற்றும் மனைவியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ரஸ்வீன் கவுர் இது தொடர்பாக மனுதாரரின் மனைவி, மாமனார், மாமியாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை திருமணம் என்ற பெயரில் மதமாற்றம் செய்ய முயலும் லவ் ஜிகாத் முறை தற்போது அதிகரித்து வருவதால் கட்டாய மதமாற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Source : Dinamalar