உலகமே அதிர்ச்சி.. டோக்யோவில் அதிகரிக்கும் தொற்று : ஒலிம்பிக் நடைபெறுமா?

By : Bharathi Latha
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர்கள் தங்களை மிகவும் சிறப்பான முறையில் தயார் படுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் குறிப்பாக ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடான ஜப்பான் தலைநகர் டோக்யோவில் தற்போது கொரோனா பாதிப்புகளில் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பு முறைகளை பின்பற்றி 10 ஆயிரம் உள்நாட்டு ரசிகர்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப் பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை அவசர நிலை பிரகடனத்தை ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷிஹிடே சுகா அறிவித்தார்.
தற்போது ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 6 தினங்களே உள்ள நிலையில், அனைத்து நாடுகளின் வீரர்களும் ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் நடைபெறும் நகர் பகுதிக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், ஒலிம்பிக் நகர் பகுதியில் இருக்கும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது உலக நாடுகள் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சுமார் 1,000க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கும் பகுதியில் இருந்த அந்த அதிகாரி வெளியேற்றப்பட்டு தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
