ராமநாதபுரத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அராஜகம் செய்யும் மாற்று மதத்தினர்!
By : Shiva
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அக்னி வீரபத்திர ஸ்வாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
ராமநாதபுரம் சர்க்கரை கோட்டை பகுதியில் வீரபத்திர ஸ்வாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமாக அப்பகுதியில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் கடந்த 1995ஆம் ஆண்டு வீரபத்திர கீதாரி யாதவ் மற்றும் முத்துக் கருப்ப கீதாரி யாதவ் ஆகியோரால் தானமாக எழுதி வைக்கப்பட்டவை.
இந்த கோவில் நிலத்தை சலீம்கான், முஸ்தபா மற்றும் காதர் தாஸ் திருமண மஹால் உரிமையாளர் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துள்தாகக் கூறப்படுகிறது. இவர்களிடம் இருந்து ஆக்கிரமிப்பு நிலத்தை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்று பூசாரி ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2013ஆம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த கோவில் நிலங்கள் தற்போது வரை மீட்கப்படவில்லை.
ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டி அதன்மூலம் வருவாய் ஈட்டி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தருமாறு இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் ராமமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.