Kathir News
Begin typing your search above and press return to search.

கோடிக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு - குறுகிய கால கட்டத்தில் சாதித்துக் காட்டிய மோடி அரசு!

கோடிக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு - குறுகிய கால கட்டத்தில் சாதித்துக் காட்டிய மோடி அரசு!
X

ShivaBy : Shiva

  |  26 July 2021 2:41 AM GMT

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவியதை தொடர்ந்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், உண்டு உறைவிட பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய அங்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2020-ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு 10 மாதங்களுக்கும் குறைவான காலத்தில், நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 6.85 லட்சம்(66 சதவீதம்) பள்ளிகள், 6.80 லட்சம்(60%) அங்கன்வாடி மையங்கள் மற்றும் 2.36 லட்சம் (69%) கிராம பஞ்சாயத்துக்கள் மற்றும் சமுதாய சுகாதார மையங்களில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியிலும், ஆந்திர பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, பஞ்சாப், சிக்கிம், தமிழ்நாடு மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள அனைத்து பள்ளிகள், உண்டு உறைவிட பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் குடிநீர் குழாய் இணைப்புகள் மத்திய அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, 74 மாவட்டங்கள் மற்றும் 1.04 லட்சம் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு கிராம வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க 3.60 லட்சம் கோடி செலவில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் குடிநீர் இணைப்பு வசதி இல்லாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு செய்து தரப்பட்டு வருகிறது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்த ஜல் ஜீவன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News