Kathir News
Begin typing your search above and press return to search.

துணை ராணுவப் படையினரின் மேலும் ஒரு சேவை - அமித்ஷாவின் பலே திட்டம்!

துணை ராணுவப் படையினரின் மேலும் ஒரு சேவை - அமித்ஷாவின் பலே திட்டம்!
X

ShivaBy : Shiva

  |  26 July 2021 10:51 AM GMT

இரண்டு நாள் பயணமாக மேகாலயா சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிரபுஞ்சியை மீண்டும் பசுமை ஆக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் நிலையில் கார்பன் உமிழ்வை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குறைத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ''என்றும் பசுமைமாறா வடகிழக்கு'' என்ற கோஷத்தை எழுப்பிய அமித்ஷா, காடு வளர்ப்பு, மற்றும் மரம் நடுதலின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். முன்பு சிரபுஞ்சியில் ஆண்டு முழுவதும் மழை பெய்ததாகவும், வளர்ச்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாக காடுகள் அழிக்கப்பட்டதால், இன்று நிலைமை மாறிவிட்டதாகவும் அமித்ஷா கூறினார். சிரபுஞ்சியை மீண்டும் பசுமையாக்கும் லட்சிய திட்டம் இன்று தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். மரங்கள் நடுவதற்காக, ஒட்டுமொத்த சிரபுஞ்சியையும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு தத்தெடுக்கவுள்ளதாக அமித்ஷா தெரிவித்தார்.

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் துணை ராணுவ படையினர் நாட்டைப் பாதுகாப்பது மட்டுமில்லாமல் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் கூடுதல் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு அவற்றை சிறப்பாக செய்து வருகின்றனர். துணை ராணுவ படையினர் இதுவரை 1.48 கோடி மரக்கன்றுகளை நட்டதாகவும் அவற்றில் 1.36 கோடி மரக்கன்றுகள் நல்ல முறையில் வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தாண்டில், நாட்டின் பல பகுதிகளில், ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் 1000 ஹெக்டேரில், 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.

புவிவெப்பம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் இன்று போராடி வரும் நிலையில், நாடு முழுவதும் அதிகளவிலான சமையல் கேஸ் சிலிண்டர்களை விநியோகிப்பதன் மூலம், கார்பன் உமிழ்வை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார் எனவும், நீர்மின்சக்தி மற்றும் சூரிய மின்சக்தியில் இந்தியா இன்று முன்னணியில் உள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சரின் முயற்சியில் தொடங்கப்பட்ட மரம் நடுதல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மத்திய ஆயுதப்படைகள் நாடு முழுவதும் மரம் நடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த பிரச்சாரத்தின் கீழ் தற்போது 16 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News